துவாரகையில் மாயதுயில் கொண்டிருந்தான் மாயக்கண்ணன்.. போருக்கு உதவி கேட்பதற்காக துரியோதனன் உள்ளே சென்று.. ஆணவத்தோடு போய் தலை பக்கமாக உள்ள ஆசனத்தில் அமர்ந்தான்.. அதன் பிறகு சற்று நேரத்தில் அர்ஜுனன் வந்து பணிவோடு கண்ணனின் பாதத்தின் பக்கமாக கையை கட்டிகொண்டு நின்றான். தூங்கி கொண்டிருந்த கண்ணன் விழித்ததும்.. முதலில் அர்ஜுனனை பார்த்தார்.., பிறகு திரும்பி ஆசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனை பார்த்தார்.. அவர்களுக்கு நல்வரவுகூறி.. வந்த காரணத்தை விசாரித்தார்.
துரியோதனன் நானே முதல் வந்தேன் போருக்கு உங்களிடம் உதவி கேட்டு வந்தேன் என்றான். அதற்கு கண்ணன் நீ முதலில் வந்தாய் என்றாலும் நான் முதலில் அர்ஜுனனை பார்த்தாலும் வயதில் சிறியவர்களானவரின் விருப்பதை பூர்த்தி செய்வதே என் கடமை.. அதனால் முதலில் அர்ஜுனனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.
அர்ஜுனா.. என்போன்ற சக்தி கொண்ட படைவீரர்கள் எண்ணிலடங்காதவர்கள் என்னிடம் இருக்கிறார்கள் அவர்களை கேட்கலாம்.. அல்லது ஒரு ஆயுதம் ஏந்தாமல் யுத்தம் புரியாத என்னையும் கேட்கலாம். எவை வேணும் என்றார் கண்ணன். அர்ஜுனன் சற்றும் தயங்காமல் "கண்ணா.. நீ வந்தாலே எனக்கு போதும்.. சாரதியாக எனக்கு வழிகாட்டுங்கள் கண்ணா.." என்றான். துரியோதனன் மகிழ்ச்சியோடு படைகளை பெற்று சென்றான். கண்ணனை மட்டும் கேட்ட அர்ஜுனனே கீதையும் பெற்று போரிலும் வென்றான்..
அதெல்லாம் சரி.. எப்பவோ நடந்த இந்த சம்பவம் இப்போ ஏன் என்று கேட்கிறீங்க.. என்ன அவசரம்.. சொல்லுறேன்.. அன்று அர்ஜுனன் முன் வைத்த கேள்வியைதான் இன்றும் எங்கள் முன் வைக்கிறான்.. நாமோ.. அவன் படையல்களை விரும்பி துரியோதனனை போல் தோல்வியை தழுவி விட்டு கடவுளை திட்டவே தயார்.. அந்த அர்ஜுனன் போல் கண்ணன் பாதமே சரணமடைந்து.. வெற்றி கொள்ள நாம் தாயாராக இல்லை... என்ன நான் சொல்வது சரி தானே....?
Aucun commentaire:
Enregistrer un commentaire