lundi 2 janvier 2012

ஏது தோல்வி..?

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் வெடித்தகாலம்.. ஹிட்லரின் நாஜி அமைப்பு பலலட்சம் யூத அப்பாவி மக்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து கொன்று குவித்த காலம் அது.. அப்போது நடந்த சம்பவம் இது.. ஹட்லர் அமைப்பால் ஒரு குடும்பம் சிதறடிக்கப்பட்டது.. முதலில் பெரியவர்கள் முதலாளி முகாம்களுக்கு இழுத்து செல்லச் செல்லப்பட்டார்கள்.  மிச்சம் இருந்தது 13வயது சகோதரியும் எட்டு வயது சகோதரனும்தான்.. அவர்களையும் சிறைப்பிடித்து இழுத்து போனார்கள்.. அவர்களை போல் இன்னும் பல சிறுவர்கள்.. ,சிறுமியர்கள் பல குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படு ஆட்டு மந்தைகள் போல ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். தாங்க முடியாத குளிர்.. எப்போதாவது வீசப்படும் உணவை பொறுக்கி உண்டு கொண்டு குளிரிலும் பயத்திலும் நடுங்கிக் கொண்டு ரயிலுக்காக காத்து இருந்தனர்.

                                         மூன்று குளிர் இரவுகள் கழித்து ஒரு ரயில் வந்தது.. எப்படியாவது ஏறி இடம்பிடித்து விடவேண்டும் என்பதற்காக அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்.. அந்த கலவரத்தில் அந்த சிறுவன் தன் ஷுக்களை தவற விட்டுவிட்டு ஏறி விட்டான். கதவு பூட்டப்பட்டு ரயில் புறப்பட்டது. சிறுவன் தன் அக்காவிடம் ஷுக்களை தவறவிட்டதை சொன்னான்..

                                               ஏற்கனவே அவளுடைய தாய்தந்தையை எங்கே என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலை.. தங்களுக்கு என்ன நடக்கப்போகிறதோ என்ற பயபதட்டமும் வேறு.. எல்லாமாக சேர்த்து அந்த பெண்ணுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்து விட்டது..
"இருக்கும் கஷ்டம் போதாதா.. இந்த குளிரில் ஷுக்கள் இல்லாமல் எப்படி இருக்க போறாய்..?இனி என்ன செய்ய போகிறாய் பொறுப்பில்லாத முட்டாள்..!" என்று ஆவேசமாகி என்னென்வோ வார்த்தைகளால் திட்டி தீர்த்து கொண்டு இருந்தாள்..

                                          அடுத்த ரயில் நிலையம் வந்தது.. பெண்களையும் பையன்களையும் தனிதனியாக பிரித்து அடைத்தனர்.. அதற்கு பிறகு அவள் தம்பியை பார்க்கவே முடியவில்லை... ஒரு கடும் சிறைமுகாமில் அடைக்கப்பட்டாள்.. போர் நிறுத்தத்துக்கு பின் அவள் விடுதலையாகி வெளியே வர மூன்றரை வருடங்கள் ஆகின.. தன் குடும்பத்தை சேர்ந்த யாருமே உயிரோடு இல்லையென அறிந்தாள்.. தம்பியை கடைசிக்கடைசியாய் பார்த்த போது இடைவிடாமல் அவள் திட்டிதீர்த்தாளே.. அதுதான் அவள் உறவினரோடு இறுதியாக பேசிய வார்த்தைகள்.. அவள் உருகினாள்.. ஆனால் உடைந்து போகவில்லை.. மனதில் ஒர் உறுதி பூண்டாள்.. "நான் யாருடன் இனி பேசினாலும்.. அது அவர்களுடன்  பேசும் கடைசிப் பேச்சாக இருந்தால்.. எப்படி பேசுவேனோ.. அப்படிதான் பேசுவேன்..!"

                                     இந்த உறுதி எடுத்ததால் அந்த சாதாரணப்பெண் ஒரு மகானை போல வாழ்ந்தாள்.. பேரிழப்பை சந்தித்த போதும் அதிலிருந்து மாபெரும் நன்மையை எடுக்க முடிந்தது.. அதில் அவளுக்கு ஏது தோல்வி..?

அன்புடன் தபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire